August 15, 2018
  • August 15, 2018
Breaking News

Tag Archives

விஸ்வரூபம் 2 விமர்சனக் கண்ணோட்டம்

by on August 11, 2018 0

கமல் ஒரு சகலகலா வல்லவர். அவருக்கு எல்லாக் கலைகளும் தெரியும் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். அதில் சமையலும் அடக்கம்..! அந்த வகையில் மீந்துபோன புளித்த மாவில் புதிதாக வெங்காயம் சேர்த்து அவர் ஊற்றியிருக்கும் ஊத்தப்பம்தான் இந்த விஸ்வரூபம் 2. எப்படி ‘ஊத்தி’யிருக்கிறார் பார்ப்போம். கமல் என்கிற மகா கலைஞனை நாம் போற்றுகின்ற அளவுக்கு… கொண்டாடுகின்ற அளவுக்கு அவர் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறாரா என்றே புரியவில்லை. வழக்கமான தமிழ் சினிமாவைப்பற்றி ஒருமுறை அவர், “மணியடித்தால் சோற்றுக்கு வாலாட்டும் […]

Read More

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்

by on June 22, 2018 0

தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து… “ராகுல் காந்தி, சோனியா இருவரையும் மரியாதை நிமித்தமாகவே […]

Read More

காவிரி பற்றி கமலுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியாது – தேவே கவுடா

by on June 19, 2018 0

ஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடா, நிருபர்களுக்கு பேட்டியளித்ததில் இருந்து… “கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகச் சொன்னாலும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பதால் அனைத்து தரப்பும் பேசி விவாதித்துதான் […]

Read More

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்

by on June 5, 2018 0

“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..!” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்… “கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது […]

Read More

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் கமல் – தமிழருவி மணியன்

by on June 4, 2018 0

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய ரஜினியின் பேச்சுக்குக் கமலும் ரஜினிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அது பற்றி தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையிலிருந்து… “திரு.கமலஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் […]

Read More

தூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்

by on May 26, 2018 0

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது… “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – இதுவரை தமிழகத்திலோ, இந்தியாவிலோ கேட்டும் அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கத் துடிப்பதை இதற்கு முன் நாம் கண்கூடாகக் கண்டிருந்தாலும், தூத்துக்குடியில் நடைபெற்றதைப் போல காவல்துறை மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு […]

Read More

முதல்வர் துணை முதல்வர் பதவி விலக வேண்டும் – கமல்

by on May 24, 2018 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், அரசு தரப்பில் யாரும் தூத்துக்குடி மக்களைச் சந்திக்காத்தைக் குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்துக் கேள்வி எழுந்தபோது, “இந்தப் பதவிநீக்கம் போதாது, மேலே இருக்கும் […]

Read More

கமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு

by on May 15, 2018 0

               இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில்  வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.                   நேற்று முன்தினம் (13.05.2018) விவசாய சங்சங்களின் பிரதிநிதிகள் சிலர் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.  […]

Read More

நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை – ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்

by on April 1, 2018 0

தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக 49-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மக்களின் பிரதிநியாக நானும் பங்கேற்பேன் என்று அறிவித்திருந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் இன்று போராட்டத்தில் பங்கேற்றார். அங்கு கமல் பேசியதிலிருந்து… “எனக்கென்று ஒரு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கமல்ஹாசன். நடிகன் என்பதை விட நான் மனிதன் – நான் தமிழன். உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபாரப் பேராசையின் […]

Read More