June 22, 2018
  • June 22, 2018
Breaking News

Tag Archives

காலா திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by on June 7, 2018 0

31 வருடங்களுக்கு முன் கமல் நடித்து வெளியான ‘நாயகன்’ படத்தை நினைவுபடுத்தும் படம். அதில் எப்படி மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த வேலு நாயக்கர் அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்விடத்தைத் தக்கவைக்கவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் போராடி மாண்டாரோ அதே தேவைகளுக்காக இதில் தாராவியிலிருக்கும் அடித்தட்டு மக்களின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் திருநெல்வேலித் தமிழரான ‘காலா’ என்கிற கரிகாலன் போராடி மாளும் கதை. தாராவி குடியிருப்பை காலி செய்து கட்டடம் கட்ட ஆதிக்க சக்தி படைத்த […]

Read More

காலா கட்டணக் கொள்ளையை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது – அன்புமணி ராமதாஸ்

by on June 5, 2018 0

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை…   நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.   தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் […]

Read More

சென்னையில் கன்னடப் படத்துக்குத் தடை விதித்தபோது ரஜினி எங்கே போனார்..?

by on June 2, 2018 0

கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தைத் திரையிடக் கூடாதென்று சில அமைப்புகள் கோரி வரும் நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்.. கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ரஜினி, ‘‘காலா படத்துக்கான எதிர்ப்பைப் பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்..!” என்றார். ஆனால், கர்நாடக […]

Read More

கர்நாடகாவில் காலா திரையிடக் கூடாதென்பது என்ன நியாயம் – பொன். ராதாகிருஷ்ணன்

by on June 2, 2018 0

கோவை மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதிலிருந்து… “கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்குத் தீர்வு தந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமையக் கையெழுத்திட்ட நிதின் கட்காரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. அந்த […]

Read More

காலா பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

by on May 9, 2018 0

ரஜினிகாந்த் நடித்து ஜூன் 7-ம்தேதி வெளியாகவிருக்கும் ‘காலா’வின் பாடல்கள் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இருந்தும், பாடல்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸை இன்று தனது ட்விட்டர் வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டு விட்டார். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த பாடல்களில் ரஜினி ரசிகர்கள் குஷியடைந்து வரும் நிலையில் சில பாடல் வரிகள் அரசியலுக்கு எதிராக அமைந்துள்ளதாகக் கருத்தும் பரவி வருகிறது. அந்தப்பாடல் வரிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை […]

Read More

காலா பட செம்ம வெயிட்டு பாடல் நாளை வெளியீடு

by on April 30, 2018 0

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக பா.இரஞ்சித் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து ஜூனில் வெளியாகவிருக்கும் காலா படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் நாள மாலை 7 மணிக்கு காலா படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.  ‘செம்ம வெயிட்டு’ என்று தொடங்கும் இந்தப்பாடலை இப்போதே வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதற்கான சான்று இதுதான் இப்போதைய […]

Read More

காலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு

by on April 28, 2018 0

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்து பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ ஏப்ரலில் வெளியாகவிருந்து பின்னர் வேலை நிறுத்தத்தினால் தள்ளிப்போய் இப்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக நடந்தேற வேண்டிய ‘காலா’ படத்தின் இசை வெளியீடு எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கிறது தனுஷ் இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட். அதில் ‘காலா’ படத்தின் இசை வெளியீடு மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அதில் அறிவித்திருக்கிறார் அவர். சந்தோஷ் நாராயணன் […]

Read More